பெரும் சரிவிலிருந்து சற்றே மீண்டது பங்குச் சந்தை... 315 புள்ளிகள் வீழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

Mumbai Stock Exchange
மும்பை: சர்வதேச கடன் தரவரிசையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக குறைவான ரேட்டிங் வழங்கப்பட்டதன் எதிரொலி, ஆசிய பங்குச் சந்தைகளை உலுக்கிவிட்டது.

ஸ்டாண்டர்டு அண்ட் பூவர் நிறுவனம் இந்த ஆண்டுக்கான கடன் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கவுக்காவின் அந்தஸ்து குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. AAA என்றிருந்த அமெரிக்காவின் ரேட்டிங் AA+ என்று குறைந்துள்ளது.

குறுகிய காலக் கடன் தரவரிசையில் அமெரிக்காவுக்கு இடமில்லாமல் போய்விட்டது.

இதன் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த சந்தேகம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இது ஆசிய பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்துள்ளது.

கடந்த வெள்ளியன்று பெரும் சரிவுக்குள்ளான இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் அதே நிலை தொடர்ந்தது..

இன்றுகாலை 10 மணிக்கு சென்செக்ஸில் 3.1 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது. 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்ததில், முதலீட்டாளர்கள் ஆடிப் போனார்கள். தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 3 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது.

11 மணி அளவில் 449 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் குறியீட்டெண் 16,856.87 ஆக இருந்தது. நிப்டி 132 புள்ளிகளை இழந்து 5,079.25 ஆக இருந்தது.

அனைத்து ஆசிய சந்தைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதைத் தொடர்ந்து, வீழ்ச்சியைத் தடுக்கும் யோசனைகளை முன்வைக்க G7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைமை வங்கிகளின் தலைவர்கள் இந்த வாரம் கூடுகிறார்கள்.

பிரணாப் உறுதிக்குப் பிறகு...

இதற்கிடையே மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதால் இந்தியா நெருக்கடிக்குள்ளாது என உறுதியளித்த பிறகு சற்றே சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை. வர்த்தக நேர முடிவில் 315 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் 16,990-ல் நிலை பெற்றது. 75 புள்ளிகள் குறைந்து 5,118.50-ல் முடிவுக்கு வந்தது நிப்டி வர்த்தகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+