ராமதாஸ் நாடகம் இனியும் வன்னியர்களிடம் எடுபடாது-வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி
இடைப்பாடி: வன்னியர்களை இதுவரை ஏமாற்றி வந்த பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சின் நாடகம் இனியும் எடுபடாது, வன்னியர்கள் ராமதாஸை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர் என்று, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
வன்னியர் கூட்டமைப்பு சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம், இடைப்பாடியில் நடந்தது.
அப்போது, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை ராமதாஸ், வன்னியர்களை ஏமாற்றி வந்தார். இனிமேல் அவரது நாடகம் எடுபடாது. முடிந்துவிட்டது. அதனால், வன்னியர்கள் ராமதாஸை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், ஏழு இடங்களில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அதே போல சட்டசபைத் தேர்தலில் பா.மா.க.,வுக்கு மூன்று இடங்களையே கொடுத்தனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 8 சதவீதம் உள்ஒதுக்கீடு, தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட், ஏழை மக்களுக்கான பட்ஜெட் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications