குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சேற்றில் சிக்கி பலி
ராமநாதபுரம்: குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், பேத்தி என 3 பேர், சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், பக்கிரி புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (50). இவரது மகள் காளீஸ்வரி (30), பேத்திகள் சுகன்யா (8), நந்தினி ஆகியோருடன், அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற நந்தினி அங்கிருந்த சேற்றில் சிக்கி திணறினார். அலறல் சத்தம் கேட்டு, நந்தினியை காப்பாற்ற அங்கு சென்ற காளீஸ்வரியும் சேற்றில் சிக்கினார். இருவரும் அலறுவதை கண்டு, லட்சுமி களமிறங்கினார். முடிவில் மூவரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
குளக்கரையில் நின்ற சுகன்யா, அப்பகுதியினரை உதவிக்கு அழைத்து வருவதற்குள் மூவரும் இறந்துவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications