ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய பாரத யாத்திரையை துவக்கியது பார்வர்டு பிளாக் கட்சி
கன்னியாகுமரி: ஊழலுக்கு எதிராக நடத்தும் நாடு தழுவிய பாரத யாத்திரையை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கன்னியாகுமரியில் துவங்கினர்.
இந்த யாத்திரையில், சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பாங்குளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளை முறியடிக்க வேண்டும்.
உலகமயமாக்குவோம் என்ற போர்வையில் வளரும் நாடுகளின் வளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களை முறியடிக்க வேண்டும். நேதாஜி சுபாசந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23ம் தேதியை தேசபக்தி தினமாக அறவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அகில இந்தி பார்வர்டு பிளாக் சார்பில் கன்னியாகுமரி முதல் டில்லி வரையிலும், காஷ்மீர் முதல் டெல்லி வரையிலும், திரிபுரா முதல் டில்லி வரையிலும் மணிப்பால் முதல் டில்லி வரையிலும் வாகன பிரசார யாத்திரை நடக்கிறது.
இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி-டில்லி பிரசார வாகன யாத்திரை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து துவங்கியது. இந்த பேரணிக்கு கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
பேரணியை அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், மாநில பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரளாவின் முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் தமிழகம் வந்து கர்நாடகா வழியாக செப்டம்பர் 5 ம் தேதி டில்லி செல்கின்றது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications