நேரு பெயரைப் பயன்படுத்தி ரூ.4.5 லட்சம் மோசடி- போலீஸ் விசாரணை
கரூர்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பெயரில் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்து கரூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்து வருபவர்கள் கருணாகரன், சம்பத், லோகநாதன். இவர்கள் மூன்று பேரும் கரூர் எஸ்.பி.நாகராஜனிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
திருச்சி உறையூரில் கார்த்திக் செராமிக் என்ற பெயரில் கடை நடத்தி வரும் ரவீந்திரன் மற்றும் அவரது சகலை முருகானந்தம். இருவரும் தொழில் செய்ய தலா 1.5 லட்சம் ரூபாய் எங்களிடம் வாங்கினர்.
பணம் பெற்றுக கொண்டதற்காக இருவரும் எவ்வித முறையான பத்திரமு்ம் வழங்கவில்லை. மேலும், பெரம்பலூரில் கிளை நிறுவனமும் துவக்கவி்ல்லை. வரவு செலவு கணக்கையும் ஒப்படைக்கவில்லை, இதுகுறித்து கேட்கும் போதெல்லாம், ஏதாவது கூறி தப்பி வந்தனர்.
இதுகுறித்து கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேருவிற்கு நெருங்கியவர்கள் என போலீசார் புகாரை கிடப்பில் போட்டதாக சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, மோசடி நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த புகார் மீது விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசாருக்கு கரூர் எஸ்.பி. நாகராஜன் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications