1965ல் குஜராத் முதல்வர் விமானத்தை சுட்ட பாக். விமானி மன்னிப்பு கேட்டு இமெயில்
இஸ்லாமாபாத்: 1965-ம் ஆண்டு போரின்போது குஜராத் முதல்வர் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் விமானி 46 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருக்கையில் அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேத்தா, அவரது மனைவி சரோஜ்பென் மேத்தா, 3 அரசு அதிகாரிகள், விமானப் பணியாளர், குஜராத் சமாச்சார் நிருபர், ஏர் இந்தியா விமானி ஜஹாங்கீர் என்ஜினியர் ஆகியோர் சென்ற விமானம் பாகிஸ்தானியர்களால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவருமே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த விமானத்தை சுட்ட பாகிஸ்தான் விமானி குவாய்ஸ் ஹுசைன், ஜஹாங்கீர் என்ஜீனியரின் மகளுக்கு மன்னிப்புக் கேட்டு இமெயில் அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஹுசைன் பிடிஐக்கு கூறியதாவது,
அப்போது போர் நடந்து கொண்டிருந்தது. விமானத்தை சுட்டவுடன் ஒரு எதிரியை அழித்தாகிவிட்டது என்று நினைத்து மகிழ்ந்தோம். எனது சகாக்கள் என்னைப் பாராட்டினார்கள். இந்த சம்பவம் மாலை 4 மணிக்கு நடந்தது.
7 மணிக்கு ஏர் இந்தியா ரேடியோவில் குஜராத் முதல்வர் சென்ற விமானம் சுட்டுத் தள்ளப்பட்டது என்று செய்தி வந்ததைக் கேட்டு நாங்கள் வருத்தமடைந்தோம். உளவு பார்க்கும் விமானம் என்று நினைத்து தான் சுட்டேன் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications