ஊழல் புகாரில் சோனியா காந்தியும் சீக்கிரமே சிக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்
ராமேஸ்வரம்: பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் ஊழல் புகாரில் சிக்குவார் என்று தமிழக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் கங்கை பாதுகாப்பு குழு சார்பில் ராமநாதசுவாமி கோயிலில் ருத்ரஜப வேள்வி நடந்தது. இந்த வேள்வியில் கலந்து கொண்ட பின், பா.ஜ.க.மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கிறது. இந்நிலை நீடித்தால், ஏற்கனவே நாங்கள் அறிவித்தது போல் கச்சத்தீவில் தேசிய கொடியேற்றும் போராட்டம் நடத்தப்படும். இந்தியர்கள் எவரையும் தாழ்த்தி பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தகுதி இல்லை. சீனாவோடு சேர்ந்து இலங்கை செய்யும் துரோகத்திற்கு இந்தியா துணை போக்க கூடாது.
அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தன்னுடையது என கூறுவதற்கு இடம் அளித்து விடக்கூடாது. கடல் முற்றுகை போராட்டம் நடத்திய என் மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு, பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம். தற்போது நாட்டில் நிலவி வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த ஊழல் புகாரில் காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியாகாந்தியும் சிக்குவார், என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications