சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீஸ் பாதுகாப்பு

நாடு முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கோட்டையைச் சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது.இங்குதான் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைக்கவுள்ளார்.
இப்போதிருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான ரவுடிகள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விட்டனர். விடிய விடிய இரவு முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
விடுதிகள், ஹோட்ல்கள் உள்ளிட்டவை தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். உடமைகள் சோதனையிடப்படுகின்றன.
ரயில்களில் வெடிகுண்டுகள் வைக்கப்படலாம் என்பதால் நீண்ட தூர ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.
கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய மத வழிபாட்டுத் தலங்களும் தீவிர பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications