போர்க்குற்றச்சாட்டு: பெருகி வரும் சர்வதேச நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சீனா ஆதரவு
பீஜிங்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் செயல்கள் தொடர்பாக பெருகி வரும் சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற இலங்கைக்கு சீனா பக்கபலமாக இருக்கும் என்று அந்நாட்டின் அதிபர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.
ராஜகபக்சே தலைமையிலான குழு 4 நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளது. அங்கு சீன அதிபர் வென் ஜியாபோவை ராஜபக்சே சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வரும் ஒத்துழைப்பு, நல்லுறவு எப்பொழுதும் இருக்கும் என்றும், இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா உறுதுணையாக இருக்கும் என்றும் ஜியாபோ தெரிவித்தார்.
தங்கள் நாட்டிற்கு சீனா அளித்து வரும் ஆதரவை ராஜகபக்சே பாராட்டினார். அப்போது மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து சர்வதேச நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சீனா முழு ஆதரவு அளிக்கும் என்று ஜியாபோ உறுதியளித்தார்.
ராஜபக்சேவுக்கு டாக்டர் பட்டம்
இதற்கிடையே, பீஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பலக்லைக்கழகம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஆராய்ச்சி மையத்தையும் ராஜபக்சே திறந்து வைத்தார்.
பல்கலைக்கழக வேந்தருக்கு ராஜபக்சே புத்தா சிலையையும் ஒன்றை பரிசளித்தார். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான நட்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றை நட்டார். இந்த விழாவில் சீனப் பேராசிரியர்கள், சிங்கள மாணவர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications