திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் முறைகேடு காட்டிய ஊழியர் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், அன்னதான நன்கொடை திட்டத்தில் முறைகேடு செய்த ஊழியரை கோயில் நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவில் ஈஸ்வரனுக்கு அக்னி ஸ்தலாக விளங்குவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கோயிலில் அன்னதான திட்டத்தை சிறப்பாக கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் அன்னதான திட்டதிற்காக, பொதுமக்கள் பலர் நன்கொடையை வழங்கி வருகின்றனர்.
இதில், பக்தர்கள் செலுத்திய அன்னதான நன்கொடை, 85 ஆயிரம் ரூபாயை கணக்கில் வரவு வைக்காமல், உமாமகேஸ்வரன் என்பவர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட உமாமகேஸ்வரனை கோயில் இணை ஆணையர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications