காரைக்குடி- தேவகோட்டை மகளிர் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்- நாம் தமிழர்
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வரை மகளிர் சிறப்பு பஸ் தனியாக இயக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்குடி பஸ் நிலையம் அருகில் ஜெகன் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சி செயற்குழு கூட்டம் அதன் நகர ஒருங்கிணைப்பாளர் கரு.சாயல்ராம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லேனா மாறன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, கிரனூர் துரைப்பாண்டி, காரைக்குடி மதிவாணன், திரைப்பட இயக்குனர் பிரபாகரன், இளையன்குடி லெனின், காரைக்குடி அகிலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலங்கை அரசின் போர்குற்ற நிகழ்வுகளை குறுந்தகடு மூலம் பொது மக்களிடம் எடுத்துச் செல்வது, தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதரா தடை விதிக்க வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கொச்சைப்படுத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அவரது தம்பி கோத்பய ராஜபக்ஷே ஆகியோரை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
பேரறிவாழனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டணையை இந்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வரை காலை மற்றும் மாலை நேரங்களில் மகளிர் சிறப்பு பஸ் இயக்க வேண்டும்.
காரைக்குடியில் நகரத்தில் உள்ள சம்பை ஊற்றை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, காரைக்குடி நகரத்திற்குள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் போன்றவைகளை இணைக்கும் விதமாக (டவுன் பஸ்) நகர பஸ்சை உடனே இயக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications