காங்கிரஸ் கோஷ்டியினர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும்: ஈவிகேஸ் இளங்கோவன்
விருதுநகர்: காங்கிரஸில் அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்தால் கூட சிரிப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ஒருவரையொருவர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விருதுநகர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று பெண்கள் வளர்ந்து வருகின்றனர். 33 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக்குமாறு கேட்கின்றனர். அது விரைவில் நடக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மேலிடம் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. அதற்காக நான் ஒன்றும் வருத்தப்படவில்லை.
எனக்கு மேலிடத்தின் மீது கோபம் இருந்தாலும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. கட்சி நன்றாக இருந்தால் தான் இந்தியா நன்றாக இருக்கும். இந்தியா நன்றாக இருந்தால் தான் தமிழ் நாடு நன்றாக இருக்க முடியும். கடந்த 1967-ம் ஆண்டு இழந்த பெருமையை நாம் மீண்டும் பெற்றேத் தீர வேண்டும்.
காந்தியடிகள், காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்காக சிறைக்கு சென்றனர். அது தியாகம். தற்போதுள்ள தலைவர்களும் சிறைக்குச் செல்கின்றனர். ஆனால் அதற்கு வேறு காரணம் உள்ளது.
காங்கிரஸில் அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று இருப்பதால் ஒருவரையொருவர் பார்த்தால் கூட சிரிப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். ஒருவரையொருவர் கட்டி அணைத்து நட்புடன் பழக வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications