பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ. 9,000 கோடியில் பிரமாண்ட அணை கட்டும் சீனா- இந்தியா கவலை

Subscribe to Oneindia Tamil

Brahmaputra River
பெய்ஜிங்: திபெத்தில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே சுமார் ரூ. 9,000 கோடியில் பிரமாண்ட அணையை கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

திபெத்தில் உருவாகும் இந்த நதியின் குறுக்கே கட்டப்படும் அணையில் மின்சார தயாரிப்புக்காக மின் நிலையத்தையும் அமைக்கவுள்ளது சீனா.

திபெத்தின் குடிநீர், மின்சாரம், பாசனத் தேவைகளுக்காக இந்த அணையைக் கட்டப் போவதாக சீனா அறிவித்துள்ளது. இதன்மூலம் திபெத்தின் 16.2 லட்சம் விவசாயிகளும் பொது மக்களும் பயனடைவர் என்று கூறியுள்ளது.

சீனாவின் இந்த அணைத் திட்டத்தை இந்தியா கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளது. பிரம்மபுத்திரா நதி அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. இந்த மாநிலங்களின் பெரும்பாலான குடிநீர், பாசனத் தேவைகளை இந்த நதி தான் பூர்த்தி செய்து வருகிறது.

இந் நிலையில் அருணாசலப் பிரதேசத்தையே ஒட்டு மொத்தமாக சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியாவிடம் ஆலோசனை ஏதும் நடத்தாமல் பிரம்மபுத்திராவின் குறுக்கே அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது கவலை தரும் விஷயமாகும்.

திபெத்தில் உருவாகி இந்தியா, வங்கதேசம் வழியே பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் இந்த நதியின் நீளம் 2,900 கி.மீ. ஆகும். பிரம்மபுத்திரா என்பதற்கு, பிரம்மனின் மகன் என்று அர்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+