பாகிஸ்தானிலும் அன்னா அலை- ஊழலை எதிர்த்து தொழிலதிபர் உண்ணாவிரதப் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரும் அலையை பரப்பி வரும் அன்னா ஹஸாரேவின் அமைதிப் போராட்டம் உலகநாடுகளைக் கவர்ந்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் ஒருவர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்.

அவரது பெயர் ஜெஹாங்கீர் அக்தர். 68 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அக்தர் ஒரு சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது போராட்டம் குறித்து அக்தர் கூறுகையில், இந்தியாவில் பேசப்பட்டு வரும் லோக்பால் சட்டத்தைப் போல பாகிஸ்தானிலும் ஒரு ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நான் போராட்டம் நடத்தப் போகிறேன்.

இந்தியாவை விட பாகிஸ்தானில்தான் ஊழல் மலிந்து போய்க்கிடக்கிறது. மிக மிக அதிகமாக உள்ளது. ஏற்கனவே நான் வியாபாரிகள் நலனுக்காக இஸ்லாமாபாத்தில் 22 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடியுள்ளேன். தற்போது ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.

எனக்கு எந்த வகையான எதிர்ப்பு, தடை வந்தாலும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. திட்டமிட்டபடி செப்டம்பர் 12ம் தேதி நான் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன்.

ஊழல் ஒழிப்பு மட்டுமல்லாமல், பாதுகாப்புக்காக பாகிஸ்தான் அரசு மிகப் பெரிய அளவில் செலவிட்டு வருவதைக் கண்டித்தும் நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். உண்மையில் பாகிஸ்தானுக்கு யாருமே எதிரிகள் இல்லை. எந்த வகையில் நமது பாதுகாப்பு மோசமாக உள்ளது என்பதை அரசியல்வாதிகள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

1965ல் நாம்தான் போரில் ஈடுபட்டோம். தோற்றோம். 1971ல் போரில் ஈடுபட்டோம், கிழக்கு பாகிஸ்தானை இழந்தோம். நாமாகத்தான் போரிட்டோமே தவிர யாரும் நம் மீது போர்தொடுக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். கல்வி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்.

இந்திய மக்கள் இன்று போராடி வருகிறார்கள். அதை அந்த நாட்டு அரசு காது கொடுத்துக் கேட்கிறது. அதேபோல எனது குரலுக்கும் பாகிஸ்தான் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன் என்றார்அக்தர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+