அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்திற்கான அனுமதி நிபந்தனைகளுக்குட்பட்டது- மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக சேவகர் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு செப்டம்பர் 2ம் தேதி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதி அளித்துள்ளோம் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்குகையில், செப்டம்பர் 2ம் தேதி வரை மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அன்னா ஹஸாரே குழுவினரின் பொறுப்பாகும்.
டெல்லி காவல்துறை மற்றும் ஹஸாரேவின் உதவியாளர்களிடையே நடந்த விவாதங்கள், உரையாடல்களுக்குப் பின்னர் இந்த அனுமதி முடிவு எடுக்கப்பட்டது.
இது யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடையாது என்றார் சிங்.












Click it and Unblock the Notifications