50 வருடம் எம்.ஜி.ஆரின் உதவியாளராக பணியாற்றிய முத்து மரணம்
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கிட்டத்தட்ட 50 வருடங்கள் உதவியாளாரகப் பணியாற்றிய முத்து என்கிற எம்ஜிஆர் முத்து மதுரை அருகே திருப்புவனத்தில் மரணமடைந்தார்.
எம்.ஜி.ஆரின் நிழல் போல திகழ்ந்தவர் முத்து. எம்ஜிஆரின் உதவியாளராக கிட்டத்தட்ட 50 வருடங்கள் செயல்பட்டார். அவருடனேயே எப்போதும் இருந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தின் நிர்வாகியாக செயல்பட்டார். பின்னர் மதுரை அருகே உள்ள திருப்புவனத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு வசித்து வந்தார்.
77 வயதான முத்துவுக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்து மரணமடைந்தார்.
எம்ஜிஆரின் மனித நேயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்து. அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இன்று மாலை முத்துவின் உடல் தகனம் திருப்புவனத்தில் நடைபெறுகிறது.
முத்துவின் உடலுக்கு அதிமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications