பத்திரிக்கையாளர் போர்வையில் போலி நபர்களுக்கு இலவச பயண அட்டைகள்
நெல்லை: பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் பல போலி நபர்கள் இலவச பயண அட்டைகளைப் பெற்றுள்ளனர். இதனால் உண்யிலேயே நிருபர்களாகப் பணிபுரியும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல ஆயிரம் பத்திரிக்கையாளர்கள் மாநகர் முதல் குக்கிராமங்கள் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சலுகைகள் வழங்கி வருகின்றன. ஆனால் இந்த சலுகைகள் அனைத்தும் மாநில தலை நகரங்களிலும், மாவட்ட தலை நகரங்களிலும் உள்ள பத்திரிக்கையாளர்களுக்குத் தான் கிடைத்து வருகிறது.
இதில் தப்பி தவறி மாவட்ட தலை நகரத்திற்கு இணையான ஊர்களில் பணிபுரிபவர்களுக்கு எட்டாக்கனியாகத் தான் பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நாளிதழ் நிருபர்களுக்கு வழங்கப்படும் அரசு இலவச பயண அட்டைகள் போல் தொலைக்காட்சி நிருபர்களுக்கும், கேமரா மேன்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்படி உத்தரவு வெளியான சில நாட்களிலேயே பல தொலைக்காட்சி நிருபர்கள தமிழகத்தில் இல்லாத தொலைக்காட்சிகளுக்கும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றனர். மேலும் சில நிருபர்கள் அடையாள அட்டையே இல்லாத போலி நபர்கள் பெயரிலும் அடையாள அட்டைகளை பெற்றனர்.
முறைப்படி விண்ணப்பித்த பல நிருபர்கள், கேமரா மேன்களுக்கு இலவச பயண அட்டை அநதந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலங்களில் முடங்கியும், குப்பைகளுக்குள் மூழ்கியும் போயின. பல அதிகாரிகள் தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கும், மிகவும் வேண்டியவர்களுக்கும் இலவச பயண அட்டைகளை தாராளமாய் வழங்கியதாகவும் கடந்த திமுக ஆட்சியில் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பல போலி நபர்களும் நிருபர்கள் பெயரில் இலவச பயண அட்டையைப் பெற்றனர். நெல்லை மாவட்டத்திலேயே இலவச அடையாள அட்டைகளால் பல போலி நபர்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications