சிபிஐ அறிக்கையில் ராஜசேகர ரெட்டி பெயர்-ஆந்திர அரசைக் கவிழக்கப் போவதாக ஜெகன் மிரட்டல்

அன்மையில் சிபிஐ அதிகாரிகள் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் உடைமைகளை சோதனை செய்தனர். இதையடுத்து ஜெகன் தனது தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருக்கையில் அவர் பதவியைப் பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் வீட்டில் நடந்தது. அதில் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தகவலை காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அதை கண்டித்து நான் எனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறேன் என்றார்.
இதே விவகாரத்திற்காக கே.சுரேகா, ஜே.ஜே.சுதா, சத்யதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார்.
மற்ற எம்.எல்.ஏ.க்கள் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவிருக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 29 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் கிரண் குமார் ரெட்டியின் அரசுக்கு ஆபத்தாகிவிடும். ராஜசேகர ரெட்டியை அவமதித்துள்ள ஆந்திர அரசைக் கவிழ்க்கப் போவதாக ஜெகன் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications