திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ரூ.100 கோடி ஊழல்-அமைச்சர்
சென்னை: திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர்,
கடந்த திமுக ஆட்சியில் கொள்ளை அடித்துள்ளனர். கூட்டுறவுத் துறையில் பல்வேறு இனங்களில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.7,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ததாக கடந்த ஆட்சியில் திமுகவினர் தம்பட்டம் அடித்தனர். ஆனால் ரூ.5,346 கோடி கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.506 கோடியை அவர்கள் தராமல் போய்விட்டதால் கூட்டுறவு நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளுக்காக ரூ.1.21 கோடி அளவுக்கு கடன் கொடுத்துள்ளனர்.
குறித்த காலத்துக்குள் பயிர்க்கடனை செலுத்தியவர்களிடம் வட்டி வசூலிக்கக்கூடாது என்று அம்மா ஆணையிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.17 கோடி கடன் வழங்கப்படும்.
ஸ்ரீரங்கத்துக்கு சலுகை...
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஸ்ரீரங்கம், பேட்டைவாய்த்தலை கிளைகள், ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கி ஆகியவை ரூ.30 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்படும்.
கலைக்கப்பட்ட திருவாடனைக்காவல் கூட்டுறவு நகர வங்கியை, நகரக் கூட்டுறவு கடன் சங்கமாக மாற்றி புத்துயிரூட்டப்படும்.
தேங்காயை கொப்பரையாக மாற்றுவதற்கு தென்னை விவசாயிகளுக்காக ரூ.1.30 கோடி செலவில் சூரிய உலர்கலன்கள் அமைக்கப்படும்.
மதுரையில் நடந்த இடைத் தேர்தல்களின்போது காவல் துறையினரை மத்திய அமைச்சர் அழகிரி கட்டுப்படுத்தி வந்தார். அந்தத் தேர்தல்களின்போது அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு, தேர்தல் பணியாற்ற விடாமல் தடுத்தார்.
ஒரு மாநில அமைச்சர் சட்டசபையில் மத்திய அமைச்சரவைப் பற்றி இப்படிப் பேசுகிறாரே என்று நீங்கள் கருதலாம். ஆனால், அந்த அளவுக்கு அழகிரி நடந்து கொண்டார் என்றார் ராஜு.
இக் கூட்டத் தொடரை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துவிட்ட நிலையில், ராஜுவுக்கு யாரும் பதில் தரவில்லை.
ஜெ ரசித்த அன்பான சகோதரர்களே':
செல்லூர் ராஜு பேசுகையில், இடையிடையே மற்ற எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து, அன்பான சகோதரர்களே' என்றார்.
பொதுவாக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களை மாண்புமிகு' என்று குறிப்பிடுவதுதான் வழக்கம் என்பதால், அவரது பேச்சை முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைவரும் ரசித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications