தலைமை செயலக கட்டுமானப் பணி விசாரணை கமிஷன்-அன்பழகன் மனு தள்ளுபடி
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமான பணியில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் கமிஷனை நியமித்ததற்கு தடை விதிக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விசாரணைக் கமிஷனை அமைத்தது.
இதை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையம் நடுநிலையோடு விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. ஜெயலலிதாவின் விருப்பப்படியே ஆணையத்தின் முடிவுகள் இருக்கும்.
விசாரணை ஆணையத்தை அமைத்துத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஆணையம் செயல்பட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அன்பழகன் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்பழகன் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கவே நீதிபதி தங்கராஜ் கமிஷன் அமைக்கப்பட்டது.
அரசு நிதி விவகாரத்தில் இவருக்கு நேரிடையாக தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளார். இதை பொது நல மனுவாக ஏற்கக்கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், சசீதரன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே அதனை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் நீதிபதி தங்கராஜ் கமிஷனுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு, வழக்கறிஞர் விஜயலட்சுமி சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இதற்கு இரு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications