தமிழகத்தில் மரணப் படுக்கையில் காங்கிரஸ்: இல.கணேசன்
வேதாரண்யம்: தமிழகத்தில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் மரணப்படுக்கையில் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசியதாவது,
இந்தியாவில் ஊழல் மலிந்து கிடக்க காங்கிரஸ் தான் காரணம். நேரு ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து இன்று வரை ஊழல் மலிந்துவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் விரும்பி திமுகவை நீக்கிவிட்டு அதிமுக அரசை கொண்டு வந்தனர். இதேபோன்று மத்தியிலும் வரும் 2014 அல்லது அதற்கு முன்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபையில் 63 இடங்கள் வேண்டும் என்று கேட்டு பெற்றது காங்கிரஸ். ஆனால் அதில் வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றது. எனவே, காங்கிரஸ் மரணப் படுக்கையில் உள்ளது. அதை எடுத்துச் செல்ல 4 பேர் தான் தேவை. ஆனால் இங்கு 5 பேர் உள்ளனர். கடைசி ஆள் கொள்ளிச்சட்டி தூக்கிச் செல்பவராக இருக்கலாம்.
காங்கிரஸ கட்சிக்கு அடுத்ததாக பாஜக தான் உள்ளது. வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, மாற்றத்தை ஏற்படுத்த இதுவே நல்ல தருணம். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை.
ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் கோரிக்கை நியாயமானது தான். அதை எங்கள் கட்சி மூலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயனுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications