திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதா?
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. அப்போது போட்டோ மற்றும் வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் திறக்கப்பட்டு, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. திறக்கப்படாமல் இருந்த கடைசி அறையை திறந்து முழு பொக்கிஷங்களையும் மதிப்பிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கடைசி ரகசிய அறையை திறந்தால், நாட்டில் பேராபத்துகள் ஏற்படும் என தேவபிரசன்னத்தில் தெரிந்ததாக கூறப்பட்டது. மேலும் பொக்கிஷங்களை போட்டோ அல்லது வீடியோ எடுத்து வெளிஉலகிற்கு காட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த அறையை திறப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
பொக்கிஷங்களை மதிப்பிடு செய்வதற்காக, உச்சநீதிமன்றம் குழுவை அமைத்த நிலையில், அதை திறக்க தடைவிதிக்கும்படி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், மேற்கூறிய ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரகசிய அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக, சுற்றறிக்கை ஒன்று கோயில் நிர்வாகி சார்பில் ஒட்டியுள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு கிடைத்துள்ள இந்த சுற்றறிக்கையின் நகலில், திருவிதாங்கூர் மன்னர் ஆணைப்படி ரகசிய அறைகளில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பொருட்களை போட்டோ எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டியுள்ளதால், 3.08.2007 அன்று மதியம் 2 மணிக்கு பின் ரகசிய அறைகள் திறக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மறைந்த சுந்தர்ராஜ் அய்யர் என்பவர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி ரகசிய அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
போட்டோ எடுப்பதற்காக தற்போது திறக்கப்படுகிறது என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார். அதன்பின் ரகசிய அறைகளை உடனடியாக பூட்டி சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 28 நாட்களுக்கு பிறகே பூட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2002ம் ஆண்டு எதற்காக ரகசிய அறைகள் திறக்கப்பட்டது என்பது தெரிக்கப்படவில்லை. அப்போது, கோயிலின் சில பகுதிகளில் மூலாம் பூசப்பட்டப்பட்ட போது, ரகசிய அறைகளில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய அறைகளை திறந்தால், நாட்டிற்கே ஆபத்து என கூறப்பட்ட நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications