சென்னை அருகே நள்ளிரவில் காரில் கடத்தப்பட்ட பெண் விபச்சார அழகி- உல்லாசமாக இருந்த மூவர் கைது

Subscribe to Oneindia Tamil

Accused Paranthaman, Pazhani and Murali
சென்னை: சென்னை அருகே நள்ளிரவில் காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட பெண் விபச்சார அழகி என்பது தெரிய வந்துள்ளது. அவரை யாரும் கடத்தவில்லை. மாறாக உல்லாசம் இருந்தபோது மும்பையிலிருந்து அழகிக்குப் போன் வந்துள்ளது. தாயார் உடல் நலம் குன்றியுள்ளார் என்று தகவல் வந்ததால் ஊருக்குத் திரும்ப வேண்டும் என அவர் கூறியதால்தான் வலுக்கட்டாயப்படுத்தியுள்ளனர் உல்லாசம் இருந்த 3 பேரும். இதனால்தான் அந்தப் பெண் கத்தியுள்ளார். போலீஸார் வந்து மீட்டனர்.

சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் அக்கரை பகுதியில் வாகன சோதனைச் சாவடி உள்ளது. அங்கு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வாகனச் சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் ஒரு கார் படு வேகமாக அந்தப் பகுதி வழியே சென்றது. காருக்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே எட்டிப் பார்த்தபடி காப்பாற்றக் கோரி குரல் கொடுத்தார். இதைப் பார்த்த போலீஸார் திடுக்கிட்டனர். உடனடியாக கானாத்தூர் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் போனது. மேலும் உத்தண்டி காவல் சோதனைச் சாவடியில் சாலையின் குறுக்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

தலைமைக் காவலர் வேகமாக வந்த காரைதடுத்து நிறுத்தினார். அதிரடியாக கார்க் கதவைத் திறந்து உள்ளே சிக்கியிருந்த பெண்ணை வெளியே இழுத்தார். ஆனால் உள்ளே இருந்தவர்களோ அப்பெண்ணே உள்ளே இழுத்தனர். கிருஷ்ணமூர்த்தி மட்டும் தனியாக இருந்ததால் கடுமையாக போராடினார். இருப்பினும் பெரும் சிரமத்திற்கு மத்தியில்அப்பெண்ணை வெளியே இழுத்து விட்டார். பின்னர் காருக்குள் இருந்தவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றார். ஆனால் அவர்களோ கிருஷ்ணமூர்த்தியை தாக்கி விட்டு தப்பி விட்டனர்.

அரை நிர்வாண கோலத்தில் இருந்த பெண்ணை மீட்டதும் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட பெண்ணை அடையார் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தனது பெயர் பிரியா என்றும், 20 வயது ஆவதாகவும், மும்பையைச் சேர்ந்தவர் என்றும், கணவர் பெயர் உதயா என்றும் கூறியுள்ளார்.

தனது கணவரின் நண்பரான கிருஷ்ணா பாய் என்பவருடன் மும்பையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்ததாகவும், வந்த இடத்தில் கையில் பணம் தீர்ந்து விட்டதால் தன்னை வைத்து கிருஷ்ணாபாய் விபச்சாரம் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டதாகவும் கூறினார்.

இதற்காக தனக்குத் தெரியாமல் ஒரு தொழிலதிபரை புக் செய்து அவரை காரில் ஏற்றிக் கொண்டார் கிருஷ்ணா பாய். பின்னர் மாமல்லபுரம் நோக்கி சென்றார். வழியில், கானாத்தூர் பகுதியில் கார் போனபோது தன்னை பலாத்காரம் செய்ய அந்தத் தொழிலதிபர் முயன்றார் என்று கூறினார் பிரியா.

ஆனால் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்க பிரியா மறுத்து விட்டார். மேலும் அவர் கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்ததாக கூறியதால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து பிரியாவை தீவிரமாக விசாரித்ததில் அவர் உண்மையைக் கக்கினார்.

அவர் மும்பையில் விபச்சாரம் செய்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தாஸ் என்ற புரோக்கருடன் இவருக்குத் தொடர்பு உள்ளது. அவரை வைத்து அடிக்கடி சென்னைக்கும் வந்து உல்லாசமாக இருந்து விட்டுப் போவார். அப்படித்தான் இந்த முறையும் வந்துள்ளார். வந்த இடத்தில் உல்லாசமாக இருக்க வந்தவர்களுடன் தகராறு ஏற்படவே, கத்தி கூச்சல் போட்டு கடத்தல் நாடகம் ஆடினார் என்பது தெரிய வந்தது.

இதுறித்து போலீஸ் தரப்பில் கூறியபோது, சென்னையைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபரின் மகன் பரந்தாமன், அவரது நண்பர்கள் முரளி, பழனி ஆகியோர் உல்லாசமாக இருக்க பெண் கேட்டு தாஸை அணுகியுள்ளனர். அவரும் பிரியாவைக் கூறியுள்ளார். இதையடுத்து பிரியாவை புக் செய்துள்ளனர்.

அதன்படி பிரியாவும் மும்பையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். நால்வரும் பரந்தாமனின் காரில் மாமல்லபுரம் புறப்பட்டனர். வழியில் பிரியாவுக்கு மும்பையிலிருந்து போன் வந்தது. அதில் பேசியவர்கள், தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், உடனடியாக புறப்பட்டு வருமாறும் கூறியுள்ளனர்.

இதையடுத்து தான் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று பிரியா கூறியுள்ளார். ஆனால் உல்லாசம் இருக்க வந்தவர்கள் அதை அனுமதிக்கவில்லை. கூறியபடி இரவை எங்களுடன் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று புரியாமல் வெளியே கத்தி கூச்சல் போட்டுள்ளார் பிரியா. அதைப் பார்த்த போலீஸார், கடத்தப்படுவதாக நினைத்து காரை மடக்கி பிரியாவை மீட்டனர்.

பிரியாவிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் போலீஸார் தனிப்படை அமைத்து பரந்தாமன் உள்ளிட்ட மூவரையும் பிடித்தனர். புரோக்கருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+