மாணவியரை கழிப்பறையை கழுவவைத்த பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
சேலம்: பள்ளி கழிப்பறையை சுத்தப்படுத்தும் பணியில் மாணவியரை ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அடுத்த தொண்டிப்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கழிப்பறையை மாணவியரை வைத்து சுத்தப்படுத்தியதாகவும், புதிய கட்டடப் பணிக்காக மாணவ, மாணவியரை செங்கல் மற்றும் தண்ணீர் எடுக்க வைத்தாகவும், தலைமை ஆசிரியர் மீது குற்றசாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்தை குறித்த சிடியும் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே அப்பள்ளியின் தலைமை ஆசிரியை அன்பரசி மீது பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொடர் புகார்களை குறித்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மலர்விழி, மாதவராஜ் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தங்கராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில், தலைமை ஆசிரியை மீதான புகார்கள் உண்மை என தெரிந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியை அன்பரசியை பணிநீ்க்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராமன் உத்தரவிட்டார். மேலும், பள்ளி ஆவணங்களை வெளியிட்டதற்காக உதவி ஆசிரியர் முருகேசனும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications