தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் தண்டனையை நிறுத்தக் கோரி, புதிய தமிழகம் கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாத்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 9ம் தேதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் தங்களது உடல் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற பாலு, புவனா மற்றும் கோபி உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications