கரூரில் தனியார் நிறுவன ஊழியரின் மர்ம மரணம்-ஜட்டியுடன் கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர் அருண்குமார்(25). நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் பண்டரிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டற்கு ஒரு மினி டெம்போ வந்துள்ளது.

மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது சுழலில் சிக்கி அருண்குமார் இறந்து போனதாக கூறி, ஜட்டியுடன் இருந்த அருண்குமாரை பிரேத்தை இறக்கி வைத்த சிலர் மின்னல் வேகத்தில் மறைந்து போயினர்.

ஆனால், அருண்குமார் ஆற்று சுழலில் சிக்கி இறக்கவில்லை. அவரை அவரது நண்பர்கள் தான் கொலை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் வட்டாரம் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், அருண்குமார் உடல் கரூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது உண்மை நிலை தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறந்து போன அருண்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும், அதில் தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., பிரமுகர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+