புதுவையில் ராமகோபாலன், தங்கபாலு உருவ பொம்மையை எரிப்பு
புதுவை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போட வலியுறுத்திய இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரது உருவ பொம்மையை போலீசாரின் எதிர்ப்பை மீறி இந்திய குடியரசு கட்சியினர் எரித்தனர்.
புதுவையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ்காந்தி கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து புதுவை முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகே அதன் தலைவர் கவுதம் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று மறைத்து வைத்து இருந்த இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் உருவ பொம்மையை சிலர் எரிக்க முயன்றனர். இதை போலீசார் தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ராமகோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 30 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஆனால், புதுவை பெரியார் சிலை அருகே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்திய இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உருவ பொம்மையை போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய குடியரசு கட்சியினர் எரித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications