தூத்துக்குடி கடலில் பயங்கர சூறைக்காற்று: மீன்பிடி தொழில் பாதிப்பு
தூததுக்குடி: தூத்துக்குடி கடலில் இன்று அதிகாலை சூறைக்காற்று வீசியதால் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.
தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு சுமார் 240 விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து வருகின்றன. இதில் 165 விசைப்படகுகள் மட்டுமே தினமும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும். அதுபோல இன்று அதிகாலை 4 மணி அளவில் 165 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கடலுக்குள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. படகுகளை செலுத்த மீனவர் சிரமப்பட்டனர்.
நடுக்கடலுக்கு சென்றதும் பயங்கர சூறைக்காற்று வீசியது. இதனால் விசைப் படகுகள் தடுமாறின, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதைத் தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டுவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர். இதன் காரணமாக இன்று மீன் தொழில் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications