ஜி.கே.மூப்பனாரின் 10வது நினைவு நாளில் அவரது தம்பி மரணம்
சென்னை: மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த அவரது தம்பி சம்பத் மூப்பனார், மாரடைப்பால் காலமானார்.
சம்பத் மூப்பனார், கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவிலில் வசித்து வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையிலும் இவருக்கு வீடு உள்ளது.
ஜி.கே. மூப்பனாரின் 10வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்பத் மூப்பனார் சென்னை வந்திருந்தார். நேற்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 10 மணிக்கு காலமானார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ஜி.கே. மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு மரண செய்தி தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அவர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தார்.
சம்பத் மூப்பனாரின் இறுதிச் சடங்கு நாளை சொந்த ஊரில் நடக்கிறது.
இதற்கிடையே ஜி.கே.மூப்பனாரின் 10வது நினைவு நாளையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications