திருவண்ணாமலை, வேலூரில் லேசான நில நடுக்கம்: மக்கள் பீதி
வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்றிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நேற்றிரவு 9. 10 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது சில வினாடிகள் நீடித்தது.
இந்த நில அதிர்வால் வீட்டில் உள்ள பொருட்கள் அசைந்தன, பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. இதைப் பார்த்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கண்ணமங்கலத்தை அடுத்து உள்ள படவேடு, கொளத்தூரிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளி கொண்டா, கிருஷ்ணாபுரம், காலபுதூர் அணைக்கட்டு, அகரம்சேரி, மாதனூர், கொல்லமங்கலம், கூத்தம்பாக்கம், சின்னச்சேரி, பள்ளிக்குப்பம், வெட்டுவாணத்திலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.
இந்த நில அதிர்வால் பீதியடைந்த மக்கள் நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications