தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி அமைச்சரவையிலும் தீர்மானம்- ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் கருணை காட்டி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதிலும் நிறைவேற்றிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ராமதாஸ் கூறுகையில்,
தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநரை சந்தித்து மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமென ஆளுநரை முதல்வர் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் திருமாவளவன் கூறுகையில், தமிழக அரசின் இந்த தீர்மானத்தை வரவேற்று, பாராட்டி நன்றி தெரிவிக்கின்றோம். சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் இந்திய அளவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை அழைக்க உள்ளோம் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications