அன்னா, ராம்தேவ் போராட்டங்களால் தேசியக் கொடிகளின் விற்பனை அதிகரிப்பு

அன்னாவாலும், ராம்தேவாலும் அரசுக்குத் தலைவலி என்ற போதிலும், அரசின் கஜானாவுக்கு நல்ல நேரமாகத்தான் இருந்துள்ளது. இவர்களின் தொடர் போராட்டங்களின்போது தேசியக் கொடிகள் பெருமளவில் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை காரணமாக டெல்லியில் உள்ள அரசின் காதி நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதித்துள்ளனவாம்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காதி நிறுவனங்களில் தேசியக் கொடிகளின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளதாம். கிட்டத்தட்ட 35 சதவீத உயர்வையும் இவை கண்டுள்ளன.
இதுகுறித்து காதி கிராம தொழில் கழக இயக்குநர் எஸ்.பி.சிங் கூறுகையில், கன்னாட் பிளேஸில் உள்ள நிறுவனத்தில்தான் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 10.5 கோடி அளவுக்கு கொடிகள் விற்றுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த விற்பனையை விட 35 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 7.79 கோடியாக இருந்தது என்றார் அவர்.
அன்னா ஹஸாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களின்போது தேசியக் கொடிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. சின்ன சைஸ் முதல் பெரிய சைஸ் வரையிலான கொடிகள் பல இடங்களில் போராட்டங்களின்போது பயன்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அதேபோல சுதந்திர தினத்தையொட்டியும் மக்கள் தேசியக் கொடிகளை பெருமளவில் பயன்படுத்தினர்.
காதி கிராமத் தொழில் கழகம் 6 விதமான வடிவில் கொடிகளை விற்பனை செய்கிறதாம். பெரிய சைஸ் கொடிகளின் விலை ரூ. 15,820 ஆகும். குறைந்தபட்ச விலை ரூ. 575 ஆகும்.
இந்த தேசியக் கொடிகளில் பயன்படுத்தப்படும் கதர்த் துணி கர்நாடக மாநிலம் தார்வாடில் தயாரிக்கப்படுகிறது. அச்சிடும் பணி மும்பையில் நடைபெறுகிறதாம்.
இந்திய தரக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே கொடிகள் டெல்லி நிறுவனத்திற்கு விற்பனைக்கு வருகிறதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications