ரூ. 10 கோடி மதிப்பிலான மில்லை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அபகரித்து விட்டதாக மூதாட்டி புகார்

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் கே.கே.நகரில் குடியிருக்கும் நடராஜன் செட்டியார் மனைவி தனலட்சுமி (76) . இவர், சேலம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது கணவர் நடராஜன் செட்டியாருக்கு சொந்தமான ஜே.கே.கே.நடராஜன் நூற்பாலை, சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா வீராச்சிபாளையம் கிராமத்தில் உள்ளது.
6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நூற்பாலையின் மதிப்பு ரூ. 10 கோடி. இந்த மில்லை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின்ரோட்டில் வசிக்கும் செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஈரோடு வழக்கறிஞர் பழனிச்சாமி, திமுகவைச்சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலியான ஆவணம் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டனர்.
அங்குள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களையும் கழற்றி விற்று விட்டனர். இதுதொடர்பாக நான் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நான் கொடுத்த புகாரில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களை நீக்கி விட்டு புதுப் புகார் தருமாறு கூறி வாங்கிக் கொண்டனர். மேலும் ரசீதும் கொடுத்தனர். அதன் பின்னர் மீண்டும் வரக் கூடாது என்று மிரட்டி அனுப்பினர்.
எனது மில்லை மீட்டுத் தர வேண்டும் என்று அப்பெண்மணி கூறியுள்ளார். தனது மில்லை முன்னாள் அமைச்சர் அபகரித்து விட்டதாக வயதான பெண்மணி கூறியுள்ளா புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் தற்போது மனு மீது விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் நிறைய மில்கள், தியேட்டர் சொந்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications