2வது நாளாக இன்றும் விநாயகர் சிலைகள் கரைப்பு-பெரிய சிலைகள் ஊர்வலம்
சென்னை: சென்னையில் 2வது நாளாக இன்றும் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளிலும், ஊர்வலம் செல்லும் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன. இந்த சிலைகளை கரைக்கும் பணி நேற்று முதல் நடந்து வருகிறது.
நேற்று ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர ரக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மக்கள் வீடுகளில் வைத்த சிலைகள், தெரு்ககள், முச்சந்திகளில் வைக்கப்பட்ட சிலைகள் இதில் அட்ககம்.
இந்த நிலையில் இன்று 1500க்கும் மேற்பட்ட சிலைகளை கடலில் கரைக்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை பெரிய சிலைகளாகும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், நீலாங்கலை, எண்ணூர் ஆகிய இடங்களில் இந்த சிலைகள் கரைக்கப்படுகின்றன. அதேசமயம், பெசன்ட் நகர் மற்றும் மெரீனா கடற்கரைப் பகுதிகளில் சிலைகளைக் கரைக்க தடை விதிக்கப்பட்டது.
பெரிய சிலைகளை கடலில் கரைக்க வசதியாக ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றன. சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் வகையில் கிட்டத்தட்ட பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருவல்லிக்கேணியில் வழக்கம் போல மசூதி வழியாக ஊர்வலம் செல்ல வேண்டும் என்று இந்து முன்னணியினர் பிடிவாதமாக கூறி வருவதால் அங்கு பதட்டம் காணப்படுகிறது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications