வெள்ளப் பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பென்னாகரம்: ஒகேனக்கலில் உள்ள நீர்வீழ்ச்சி, அருவி எங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், காவிரி பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கலில் உள்ள நீர்வீழ்ச்சிகள், அருவிகள் எங்கும் வெள்ளம் கைரபுரண்டு ஓடுகின்றது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகிய காட்சியை, சுற்றுலா பயணிகள் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்சி அடைந்து வருகின்றனர்.
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் போலீசார், தீயணைப்பு படையினர் ஒகேனக்கல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் நீர்மட்டம் உயர்வு
நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது.












Click it and Unblock the Notifications