சாத்தூர் அருகே கோவில்பட்டி வீரலட்சுமியின் தந்தை, சகோதரி கொலை
கோவில்பட்டி: சாத்தூர் அருகே கோவில்பட்டி வீரலட்சுமியின் தந்தை, சகோதரியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி குடிசைக்குள் போட்டு எரித்துக் கொன்றனர்.
தூத்துக்குடி மாவடடம குறுமலை அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவருக்கு பெரியதாய், வீரலட்சுமி, சின்னதாய், ஜெயப்பிரதா ஆகிய 4 மகள்கள். வெள்ளைச்சாமி என்ற மகன் உள்ளார்.
சின்னத்தாயும், வெள்ளைச்சாமியும் பாறைப்பட்டியிலேயே வசிக்கின்றனர். ராமசந்திரனின் 2வது மகள் வீரலட்சுமி கோவில்பட்டியில் வசித்து வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பே கணவராலேயே கொலை செய்யப்பட்டார். இவரது கதை பின்னர் சிம்ரன் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது.
வீரலட்சுமியின் மகள் அழகு ராஜேஸ்வரி. ராமசந்திரனின் பராமரிப்பில் சாத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
அமீர்பாளையத்தைச் சேர்ந்த மோகனுக்கு மற்றொரு மகளான பெரியதாயை ராமசந்திரன் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களை வைத்தே ராமசந்திரன் அவரது கடைசி மகள் ஜெயப்பிரதா இருவரும் அமீர்பாளையம் வந்து குடியேறினர். இப்பகுதியில் பன்றி, மாடுகளை வளர்த்து வந்தனர். இவற்றுக்கு தேவையான தீவணங்களை வைப்பதற்கு ஒரு குடிசை போட்டிருந்தார்.
தந்தை வேலைக்கு சென்று விடும் நாட்களில் இரவில் தங்குவதற்கு ஜெயப்பிரதா அவரது அக்கா வீட்டுக்கு சென்று விடுவார். வாரத்தில் ஒரு நாள் ராமசந்திரன் வீட்டுக்கு வருவார். அந்த நாளில் தந்தையும், மகளும் வீ்ட்டுக்குள்ளேயே தங்கிக் கொள்வர். நேற்று முன்தினம் ராமசந்திரன் அமீர்பாளையம் வந்திருந்தார். இவரும், ஜெயப்பிரதாவும் வழக்கம் போல் குடிசையில் தங்கியிருந்தனர். நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த குடிசை எரிந்து சாம்பலாகி கிடந்தது. தந்தை, மகளின் உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன. உடலில் வெட்டுக் காயங்களும் இருந்தன.
குடிசைக்கு வெளியே ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. இது குறித்து சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை இருந்ததால் சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியவில்லை. குடிசைக்கு வெளியே ரத்தம் சிந்தியுள்ளதால் தந்தையும், மகளும் வெளியே வெட்டிக் கொலை செய்யப்பட்டு பின்னர் உடல்களை குடிசைக்குள் போட்டு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications