பிரதமர் தலைமையில் 10ம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 10ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் வரும் 10ம் தேதி டெல்லி நடக்க உள்ளது.
கடந்த 1962ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் தோற்றுவிக்கப்பட்டது. இதில், பாராளுமன்றத்தின் 2 அவைகளின் எதிர்கட்சி தலைவர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள், 6 தேசிய கட்சிகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், வர்த்தக நிறுவன தலைவர்கள் என 147 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் மாற்றியமைப்பட்டது. இதில், சந்திரபாபுநாயுடு, லாலு பிரசாத் யாதவ், கருணாநிதி உள்ளிட்ட 15 மாநில கட்சிகளின் தலைவர்களும் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
மேலும் ரத்தன் டாடா, ஆசிம் பிரேம்ஜி உள்ளிட்ட வர்த்தக நிறுவனத் தலைவர்களும் சேர்த்து கொள்ளப்பட்டனர். இந்த மாற்றியமைக்க தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சின் கூட்டம், வரும் 10ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், ஜாதிப் பெயர்களால் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்களின் நிலையை கையாள மாநில அரசுகள் மற்றும் போலீசார் எடுக்க வேண்டிய வழிமுறைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடுகளை களைதல் உட்பட பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கு முந்தைய கூட்டம், கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
