ஜெய்ப்பூரில் அடுத்தாண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, அடுத்தாண்டு ஜெய்ப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி, ஜெய்ப்பூரில் நடக்க உள்ளது.
3 நாட்கள் நடக்க உள்ள மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைப்பார். குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார். பிரவசி பாரதிய திவாஸ் என அழைக்கப்படும் அம்மாநாட்டின் முக்கிய விருந்தினராக டிரினிடாட் நாட்டின் பிரதமர் பேர்சத் பிஸ்சிசார் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications