தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ரூ.162 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
சேலம்: தமிழகத்தின் கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உட்பட 8 மாவட்டங்களில் நில ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 162 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பதவியேற்றவுடன், மாவட்டந் தோறும் நிலமோசடி வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு துவக்கப்பட்டது.
இதையடுத்து பல மாவட்டங்களிலும் நிலமோசடி புகார்கள் குவிந்தன. இந்த வகையில், கோவை மாவட்டத்தில், மொத்தம் பதிவான 341 புகார்களில் 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில், 93 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 320 புகார்களில், 159 புகார்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என தெரிகிறது. மற்ற 161 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. அதேபோல, ஈரோடு மாவட்டத்தில் வந்துள்ள 748 புகார்களில் 8 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் வந்த 433 புகார்களில் 75 வழக்குகளும், தர்மபுரி மாவட்டத்தில் வந்த 606 புகார்களில் 13 வழக்குகளும் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் 106 புகார்களும், சேலத்தில் வந்துள்ள 867 புகார்களில் 12 வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 1,024 புகார்களில் 20 வழக்குகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்துள்ள 695 புகார்களில் 19 வழக்குகளும் பதிந்து விசாரணை நடந்து வருகிறது.
மொத்தமுள்ள 8 மாவட்டங்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக 4,820 புகார்கள் வந்துள்ளன. இதில், 2,519 வழக்குகளின் விசாரணை முடிந்துவி்ட்டது. 162 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்ட்டுள்ளது. வழக்குகளின் அடிப்படையில், மொத்தம் 87 அரசியல்வாதிகள் சிக்கி உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications