சேலத்தில் உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் யார்?: கே.வி.தங்கபாலு விளக்கம்
சேலம்: உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் யார் என்பது குறித்து கடும் மோதல் சேலத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிகாரபூர்வமான காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நின்ற சிலர், காங்கிரசுக்கு துரோகம் இழைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதே போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில், சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தேவதாஸ், மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.ஆர்.சேகரன், மற்றும் சுசீந்திரகுமார் ஆகியோர் 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாத இவர்கள் 3 பேரும் தங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் என்று கூறி அத்துமீறி காங்கிரஸ் கட்சியையும், தலைமையையும் விமர்சித்து வருவதும், அது குறித்து செய்தி வெளியிடுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
சேலம் கிழக்கு மாவட்டத் தலைவராக எஸ்.கே.செல்வராஜ், மேற்கு மாவட்டத் தலைவராக பி.கோபால் ஆகியோர் கடந்த 2009ம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, காங்கிரஸ் விரோதிகளை கட்சி தொண்டர்கள் அடையாளம் கண்டு அவர்களை புறக்கணித்து, கட்சி வளர்ச்சிக்கு செயல்பட்டு வரும் செல்வராஜ், கோபால் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications