சட்டசபைக்குள் போட்டோ எடுத்த திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவின் செல்போன் பறிமுதல்
சென்னை: சட்டசபை நடவடிக்கைகளை தனது கேமரா செல்போன் மூலம் படம் பிடித்த திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உரிமை மீறல் குழு விசாரணை நடத்தும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று திமுகவினர் மீதா நில அபகரிப்பு வழக்குகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது அண்ணா அறிவாலயம் நிலம் குறித்து அதிமுக உறுப்பினர் பி.வெற்றிவேல் புகார்கள் கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது எம்.எல்.ஏ. ராஜா தனது கையில் இருந்த செல்போன் மூலம் இந்த மோதலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் கூறினர். இதையடுத்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டார் ஜெயக்குமார். அதன்படி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சபாநாயகர் கூறுகையில், திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, பேரவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் விடியோ படம் எடுத்ததாகத் தெரிகிறது. இதில் உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், இந்தப் பிரச்னையை பேரவை விதியின்படி உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றார்.
மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர் பாலுவின் மகனான ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications