தீஸ்தா ஒப்பந்தம் கைவிடப்பட்டது: மத்திய அரசு இறங்கிவந்தும், இறங்காத மம்தா
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது வங்கதேச பயணத்தை ரத்து செய்ததையடுத்து தீஸ்தா நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இருப்பினும் மம்தா வங்கதேசப் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் புறப்பட்டார். அவர் வங்கதேச அதிபர் ஜில்லுர் ரஹ்மான், பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவிருக்கிறார். பிரதமருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்வதாக இருந்தது. ஆனால் தீஸ்தா நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த கடைசி நேரத்தில் வங்க தேசப் பயணத்தை மம்தா ரத்து செய்தார்.
இந்தியா- வங்கதேசம் இடையிலான தீஸ்தா நதி நீர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சமீபத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது தீஸ்தா நதியில் வங்கதேசத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மேனன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவு மேற்கு வங்க மாநிலத்துக்கு பாதகமானது என்பதால், இந்தத் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரதமருடனான தனது வங்கதேசப் பயணத்தை மம்தா திடீரென ரத்து செய்துவிட்டார்.
பிரதமரின் வங்க தேச பயணத்தின் போது தீஸ்தா நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது. ஆனால் மம்தா தனது எதிர்ப்பை காட்டியவுடன் அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இருப்பினும் மம்தா வங்க தேசம் செல்லவில்லை.
இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மதாய் கூறியதாவது,
நதி நீர் விவகாரம் உணர்ச்சிகரமான விஷயம். அனைத்து தரப்புக்கும் ஏற்ற வகையில் தீஸ்தா ஒப்பந்தத்தை முடிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மாநில அரசைக் கேட்காமல் மத்திய அரசு எதுவும் செய்யாது என்றார்.
வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனது ஆர்வத்தை அடக்கிக் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்த தீஸ்தா நதி நீரால் கூச் பெஹார், ஜல்பாய்குரி, வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய பகுதிகள் பயனடைகின்றன. நடந்து முடிந்த வேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த இடங்களில் திரிணாமூல் காங்கிரஸுக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான் அப்பகுதி மக்களின் ஆதரவைப் பெற மம்தா முயற்சிக்கிறார் என்று கூறப்படுகின்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications