தமிழக ஆளுநர் ரோசய்யா திருப்பதி விஜயம்- சாமி தரிசனம்
திருமலை: தமிழக ஆளுநர் ரோசய்யா, சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு புறப்பட்டு சென்றார்.
கடந்த மாதம் 31ம் தேதி, தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றார். இதையடுத்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் ஆளுநராக பதவியேற்றபின் முதல்முறையாக, திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுள்ளார்.
முன்னதாக, இன்று காலையில் சென்னையில் இருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்ட ஆளுநர், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனத்தை முடித்த பின், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சற்றுநேரம் ஒய்வெடுத்தார். கோவில் அதிகாரிகள் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.
அதன்பின் அங்கிருந்து திருமலைக்கு காரில் புறப்பட்டு சென்றார். இன்று மாலையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். தமிழக ஆளுநரின் வருகையை அடுத்து, திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு பின், இன்று இரவு திருமலையில் தங்கும் ஆளுநர், நாளை குடும்பத்தினருடன் காரில் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications