தமிழகம் முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களது போராட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்ற போதிலும், மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்ற இவர்களது கோரிக்கையால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என அரசு அஞ்சுகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி சிலைகள் சேதப்படுத்தப்படலாம் என அரசு கருதுகிறது.
சமீபத்தில் சென்னையில் 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் சிலை உள்ளிட்ட சிலைகளுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications