அமெரிக்காவில் 3 தீவிரவாதிகள் ஊடுறுவல்-கார் குண்டு தாக்குதலுக்கு அல் கொய்தா திட்டம்!

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், அல் கொய்தா அமைப்பு கார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களில் செப்டம்பர் 11ம் தேதியன்று சுரங்கப் பாதைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை கார் குண்டுகள் மூலம் தகர்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலத்தில் வந்த மிக முக்கியமான துப்பு இது. எனவே இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
அதேசமயம், இந்த உளவுத் தகவல் நம்பகமானது, முக்கியமானது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
3 தீவிரவாதிகள் ஊடுறுவல்
இதற்கிடையே, அமெரிக்காவுக்குள் 3 மர்ம மனிதர்கள் ஊடுறுவியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து எப்பிஐ உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் மூலம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சதித் திட்ட தகவலைத் தொடர்ந்து நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் நகர காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லியுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்த உளவுத் தகவல் குறித்து அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகமான தகவல் என்று ஒபாமாவிடம் தெரிவிக்கப்பட்டதால் அவர் உரிய தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அல் கொய்தா தாக்குதல் சதித் திட்டம் மற்றும் 3 தீவிரவாதிகளின் ஊடுறுவல் தகவலால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications