முத்துவேல் கருணாநிதி பற்றிய கேள்வி.. கடுப்பாகி அருள்நிதி கொடுத்த ரியாக்ஷன்.. இப்படி ஒரு பதிலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த ஒரு சின்ன சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. படம் பற்றிய கேள்விகளை விட முத்துவேல் கருணாநிதி என்ற கேள்வியும் அதற்கு அருள் நிதி கொடுத்த ஒரு வரி பதிலும் இணையத்தில் விவாதமாக மாறி இருக்கிறது.

நடிகர் அருள்நிதி என்னதான் அரசியல் குடும்ப பின்னணியை கொண்டவராக இருந்தாலும் அவர் சினிமாவின் மூலமாகத்தான் மக்களுக்கு தெரிய வந்தார். அருள்நிதி என்றாலே கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை வாங்கிவிட்டார். திரில்லர், க்ரைம், சஸ்பென்ஸ் எமோஷனல் என எல்லா வித்யாசமான கதைகளையும் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகர் அருள்நிதி பேட்டி

அந்த வரிசையில் தற்போது வெளியாக உள்ள அருள்வான் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தில் அவர் முழுமையான ஹீரோவாக நடிக்காமல் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அதுதான் பலருக்கும் சுவாரஸ்யம். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து இருந்தார்.

முதலில் இந்த படத்திற்கு வெறும் ஐந்து நாட்கள் மட்டும்தான் கால்ஷீட் கேட்டார்கள். இயக்குனர் கதை சொன்ன விதமும் அந்த கேரக்டரும் எனக்கு பிடித்து விட்டது அதனால் நானும் சம்மதித்தேன்‌ ஆனாலும் மனதிற்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. இது எப்படி போகும்? சரியாக வருமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர்கள் சிலர் உனக்கு இந்த கேரக்டர் சரியாக வரும் நீ இந்த படத்தில் தைரியமான நடி என்று சொன்னார்கள்.

Actor Arulnidhi Muthuvel Karunanidhi Karunanidhi

அருள்வான் பட சம்பவம்

பிறகு சூட்டிங் போக ஆரம்பித்ததும் கேரக்டர் பெரிதாகி ஐந்து நாளில் இருந்து 20 நாள் ஷூட்டிங் போனது என்று கூறினார். அதோடு அந்த படத்தில் அவர் ஒரு கலெக்டர் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், நான் இனி எத்தனை படத்தில் நடித்தாலும் இது மாதிரி ஒரு கேரக்டர் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை அந்த அளவிற்கு இந்த கேரக்டர் எனக்கு ஸ்பெஷல் என்று சொல்லியிருந்தார்.

பேட்டி இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த போது ஒரு செய்தியாளர் திடீரென இந்த படத்தில் உங்களுடைய பெயர் முத்துவேல் அதற்கு முத்துவேல் கருணாநிதி என்று முழு பெயரை வைத்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். உடனே பக்கத்தில் இருந்த இயக்குனர் மைக்கை அருள்நிதியிடம் கொடுத்து அவரை இதற்கு பதில் சொல்லுவார் என்று சொன்னார். அதற்கு அருள்நிதி சில வினாடிகள் அமைதியாக யோசித்து பிறகு லேசான கடுப்புடன் "அடுத்த படத்துல அப்படி பெயர் வைப்பாரு" என்று ஒரே வரியில் சொல்லிட்டு அடுத்த கேள்விக்கு போய் இருக்கிறார்.

Actor Arulnidhi Muthuvel Karunanidhi Karunanidhi

கடுப்பான அருள்நிதி

இந்த வீடியோ கிளிப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் அருள்நிதி ஏன் அரசியல் கேள்விகளை தவிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அருள்நிதி சாதாரண நடிகர் மட்டுமல்ல அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முக கருணாநிதியின் பேரனும், முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அண்ணன் மகன் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

3 வருஷம் காத்திருந்த படம்... 48 மணி நேரத்திலேயே ஓடிடியில் இருந்து மாயம்! பிரபல நடிகர் படத்துக்கு என்ன நடந்தது?
அந்த குடும்ப பின்னணி காரணமாக அவர் கலந்து கொள்ளும் பல செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சினிமாவை தாண்டி அரசியல் தொடர்பான கேள்விகள் எழுவது புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்து அவர் தனக்கு அரசியலில் விருப்பமில்லை நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒரு சிலர் முத்துவேல் கருணாநிதி என்ற பெயரை கேட்டதும் அருள்நிதி முகமே மாறிவிட்டதே என்று விவாதித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+