திருச்செந்தூர் வந்த கடம்பூர் ராஜுவின் வாகனத்தில் என்ன அது.. கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு. இந்நிலையில் கடம்பூர் ராஜுவின் வாகனத்தில் சட்டமன்ற உறுப்பினர் வாகன அங்கீகார அட்டை அகற்றப்படாமல் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில், ஏன் இன்னும் அட்டை ஒட்டப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ ஒரு இடைநிலை ஆசிரியர் ஆவார். இதே ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்று காரணமாக அந்த காலத்தில் ஆசிரியர் பணியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாக மாறினார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Former Minister Kadambur Raju

அதன் பிறகு தொடர்ச்சி வென்று எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்து வந்தார். 2021ம் ஆண்டு தேர்தலில் த அ.ம.மு.க வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனை 12,403 வாக்குகள் வித்யாசத்தில் தோற்கடித்தவர் ஆவார். இவர் ஒரு காலத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வந்தார். அரசியலுக்கு விஜய் ஒரு கத்துக்குட்டி. அ.தி.மு.க-வைப் பற்றிப் பேச விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது என்று எல்லாம் கூறியிருந்தார்.

அப்போது கடம்பூர் ராஜூ கூறுகையில், " நான் அமைச்சராக இருந்தபோது விஜய் நடித்த 'மெர்சல்' படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தார். நானும் உடன் இருந்தேன். அந்த நன்றி மறந்து அவர் பேசக்கூடாது. "விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை" என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் நிலை ஏற்பட்டது.

தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் எனக்கூறி 3 மணி நேரம் காத்திருந்து அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். சாத்தியமே இல்லாத நேரத்தில் அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தார். நேரில் வந்துவிட்டாரே என விஜய்க்காக உதவியவர் எடப்பாடி பழனிசாமி. இரவோடு இரவாக பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. "வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன்" எனச் சொன்னவர்தான் விஜய். ஆனால், இன்று அ.தி.மு.கவை விமர்சனம் செய்கிறார்." என்று எல்லாம் கடம்பூர் ராஜூ பேசியிருந்தார்.

ஆனால் அப்படி பேசிய கடம்பூர் ராஜூ அண்மையில் விஜயபாஸ்கருடன் சேர்ந்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்றைய தினம் தமிழக வெற்றிக்கழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் பலர் வந்திருந்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வந்த அவரது வாகனத்தில் சட்டமன்ற உறுப்பினர் 2021 - 2026 என்று எழுதப்பட்டிருந்தது. கடம்பூர் ராஜு நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் தற்போது வரை கடந்த ஆட்சியில் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒட்டப்பட்ட வாகன அனுமதி சீட்டு தற்போது வரை அவரது காரில் இருந்து அகற்றப்படாத சம்பவம் பேசு பொருளாக மாறி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் முத்திரை அவரது வாகனத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டு மூடப்படுள்ளது. மேலும் அவரின் வாகனத்தில் முன்பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படமும் பின்னால் எம்ஜிஆர் படமும் இடம்பெற்றுள்ளன. எனவே தற்போது ஆளுங்கட்சிக்கு மாறியுள்ள கடம்பூர் ராஜு மீது அவர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+