Sani Vakra Peyarchi: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமா, ஆபத்தா.. முழு பலன்கள் விவரம்
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

சனி வக்ர பெயர்ச்சி
அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.
அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் இப்போது வக்கிரம் பெற்று கும்பத்திற்கு வருகிறார். 5 ஆம் இடத்தில் வந்து சனி பகவான் அமருவதால் இருக்கின்ற இடம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சில விஷயங்கள் செய்வது, பயணங்கள் மேற்கொள்வது, கோயில்களுக்குச் செல்வது நல்லது, குலதெய்வ கோயில்களுக்குச் செல்வது போன்ற அமைப்பு உள்ளது.
முன்னேற்றம்
பூர்வீகத்தில் நியாபகார்த்தமாக ஏதாவது செய்வீர்கள், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, தான தர்மங்கள் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சனி பகவானின் பார்வை முதல் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகளில் உடல்நிலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவம் பார்ப்பது நல்லது. உடல்நலக் கோளாறுகளை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது.
தொல்லை தீரும்
உங்களை விட வயது குறைந்தவர்கள் மூலமாக உங்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் குறையும். சனீஸ்வர பகவானின் பார்வை நேரடியாக 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உழைப்புக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். பெரிய கவலைகள், குற்றங்கள், குறைகள் தீரும். உழைப்பால் முன்னேறும் காலகட்டம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சு வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
யாரிடம் பேசினாலும் கவனமாகப் பேசுவது, கவனமாக வேலைகளை செய்வது நன்மை பயக்கும். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமாக இருப்பது ஏற்றத்தை தரும். நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 138 நாட்களில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படாது. ஆனால், கவனக் குறைவால் கஷ்டப்படும் சூழல் இல்லாததால் கவனம் தேவை.












Click it and Unblock the Notifications