நடுரோட்டில் நல்லக்கண்ணுவுடன் ரவுடிகள் அராஜகமா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை அருகே செங்குன்றத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கார் லயோலா கல்லூரி அருகே வந்த போது 2 சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் அதை வழிமறித்துள்ளனர்.
அவர்கள் காரில் இருந்த நல்லக்கண்ணுவை வெளியே இழுத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கார் சாவியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் நல்லக்கண்ணுவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நல்லக்கண்ணு சென்ற வாடகை காரின் உரிமையாளர் மோகன் ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி காரை வாங்கிவிட்டு தவணை செலுத்தவில்லையாம். இதனால் கடுப்பான வங்கி குண்டர்களை அனுப்பி காரை பறிமுதல் செய்து வருமாறு கூறியுள்ளது. அவர்களும் காரில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கண்மூடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் காரை நடுவழியிலேயே பறிமுதல் செய்துள்ளனர்.
இந் நிலையில் நல்லகண்ணு தாக்கப்பட்டுவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
என்னை யாரும் தாக்கவில்லை-நல்லகண்ணு மறுப்பு:
இதையடுத்து என்னை யாரும் தாக்கவில்லை என்று நல்லக்கண்ணு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் வாடகை காரில் பயணித்தேன். கார் உரிமையாளர் வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணையை செலுத்தவில்லை என்று கூறி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் அந்த காரை மறித்தனர். என்னுடன் இருந்தவர்கள் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தெரிவித்ததால் அவர்கள் ஓடிவிட்டனர். தவணை கட்டவில்லை என்பதற்காக ஒரு பிரபல வங்கியினர் லேவாதேவி ஆட்களைப் போல நடந்து கொள்வது சரியில்லை என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications