கன்றுக் குட்டியின் நாக்கை அறுத்து விட்டு அதனுடன் 'உறவு' கொண்ட 4 காமக் கொடூரன்கள் கைது!
கோவை: கோவையில் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கன்றுக் குட்டி ஒன்றின் நாக்கை அறுத்து விட்டு, அதனுடன் உறவு கொண்டு பொதுமக்களிடம் சிக்கியுள்ளனர் வட மாநிலங்களைச் சேர்ந்த 4 காமக் கொடூரன்கள். இவர்கள் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இப்போது கட்டுமான வேலை முதற்கொண்டு பல்வேறு வேலைகளுக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வேலை பார்த்து வருகின்றனர். தடுக்கி விழுந்தால் யாராவது ஒரு பீகாரி மீதோ அல்லது மேற்கு வங்கத்தினர் மீதோதான் விழ வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு இவர்களின் பெருக்கம் அதிகமாகியுள்ளது.
இவர்களில் பலர் நல்லவர்களாக இருந்தாலும் பலர் பல்வேறு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக போலீஸார் கூறுகின்றனர். திருட்டு, கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் இவர்களில் பலர் சம்பந்தப்பட்டு சிக்கியுள்ளனர். பலர் தலைமறைவாகி சொந்த மாநிலங்களுக்கு ஓடிப் போய் விடுகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் ஒரு கொடூரச் செயலை செய்து 4 பேர் சிக்கியுள்ளனர். போத்தனூர், செட்டிபாளையத்தில் சிமெண்ட் கலவை தயார் செய்யும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தண்டபாணி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டுக் கன்றுக் குட்டி ஒன்று நேற்று கத்தியுள்ளது. இதைக் கேட்ட தண்டபாணி, அக்கம் பக்கத்தினருடன் அங்கு விரைந்தார். அப்போது சிலர் தப்பி ஓடுவதைப் பார்த்தார்கள். இதையடுத்து திருடர்கள் என்று சத்தம் போட்டபடி அவர்களை விரட்டினர். அதில் ஒருவர் சிக்கினார். 3 பேர் தப்பினர்.
பின்னர் கன்றுக் குட்டியைப் பார்த்தபோது அதன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. இதையடுத்து வாயைப் பார்த்தபோது நாக்கு அறுபட்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர். இதையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவன் கூறியதாவது:
எனது பெயர் பினோத். ஒரிசா சொந்த மாநிலம். 18 வயதாகிறது. என்னோடு வந்து தப்பி ஓடியவர்களின் பெயர்கள் 18 வயது நிஸ்தார், 20 வயது டேவிட், 22 வயது பெகோர். நால்வரும் ரெடிமிக்ஸ்நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறோம்.
கன்றுக்குட்டியுடன் உறவு கொள்வதற்காக இங்கு வந்தோம். அது கத்தி விடாமல் இருப்பதற்காக அதன் நாக்கை அறுத்தோம். பின்னர் வாயில் துணியையும் வைத்து அடைத்தோம். அப்படியும் அது கத்தி விட்டது.
இதையடுத்து மண்வெட்டியின் கைப்பிடியை மட்டும் கழற்றி அதை கன்றுக் குட்டியின் வாயில் இறுக்கமாக வைத்துப் பிடித்துக் கொண்டு உறவு கொண்டோம் என்றான்.
இதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊர் மக்களில் சிலர் செட்டிப்பாளையம் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க முயன்றனர். அப்போது அங்கு பெண் சப் இன்ஸ்பெக்டர் மட்டு்மே இருந்தார். மற்ற காவலர்கள் வந்ததும் வருவதாக அவர் கூறினார். ஆனால் காலை வரை யாருமே வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அருகில் இருந்த சிமென்ட் கலவைத் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த மற்ற மூவரையும் பிடித்து இழுத்து வந்து தென்னை மரத்தில் கட்டி வைத்து நால்வரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மறுபக்கம் போலீஸார் வருவதாகவே தெரியவில்லை. இதையடுத்து எஸ்.பி. உமாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நால்வரையும் கைகளைக் கட்டி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விரைந்து வந்து என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தனர். பின்னர் நால்வரையும் கைது செய்தனர். கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நான்கு குற்றவாளிகள் மீதும் இயற்கைக்குப் புறம்பாக உறவு கொள்வது, மிருகங்களைக் கொலை செய்ய முயற்சிப்பது, மிருகவதை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு் பதிவு செய்துள்ளனர்.
கன்றுக்குட்டியுடன் கொடூரமாக உறவு கொண்ட இந்த செயல் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications